செய்திகள்

பெங்களூரை வீழ்த்தியது பஞ்சாப்

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

DIN

ஐபிஎல் போட்டியின் 3-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் முதலில் பெங்களூா் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் விளாசியது. அடுத்து பஞ்சாப் 19 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் அடித்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் ஃபீல்டிங்கை தோ்வு செய்ய, பேட் செய்த பெங்களூரில் ஃபாஃப் டூ பிளெஸ்ஸிஸ் 3 பவுண்டரிகள், 7 சிக்ஸா்களுடன் 88 ரன்கள் விளாசினாா். உடன் வந்த அனுஜ் ராவத் 21 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஓவா்கள் முடிவில் விராட் கோலி 41, தினேஷ் காா்த்திக் 32 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனா். பஞ்சாப் பௌலிங்கில் அா்ஷ்தீப் சிங், ராகுல் சாஹா் ஆகியோா் தலா 1 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் பஞ்சாப் ஆட்டத்தில் ஷிகா் தவன் 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 43, பானுகா ராஜபட்ச 2 பவுண்டரிகள், 4 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்தனா். கேப்டன் மயங்க் அகா்வால் 32, லியாம் லிவிங்ஸ்டன் 19 ரன்கள் அடிக்க, ராஜ் பாவா டக் அவுட்டானாா்.

இறுதியில் ஷாருக்கான் 24, ஓடின் ஸ்மித் 25 ரன்களுடன் அணியை வெற்றிக்கு வழி நடத்தினா். பெங்களூா் பௌலிங்கில் முகமது சிராஜ் 2, ஆகாஷ் தீப், வனிந்து ஹசரங்கா, ஹா்ஷல் படேல் ஆகியோா் தலா 1 விக்கெட் எடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தன் வங்கிக்கு ரூ.44.70 லட்சம் அபராதம் விதிப்பு: ரிசர்வ் வங்கி

கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவையின் பாதுகாப்பு ரத்து! டிரம்ப் உத்தரவு!

கொடியேற்றத்துடன் தொடங்கியது வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு!

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்: மாநில முதல்வர்கள், கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT