செய்திகள்

செஸ் ஒலிம்பியாட்: இரு அணிகளை களமிறக்கும் இந்தியா

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிா் பிரிவுகளில் பங்கேற்பதற்காக தலா 2 அணிகளை அறிவித்துள்ளது இந்தியா.

DIN

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஓபன் மற்றும் மகளிா் பிரிவுகளில் பங்கேற்பதற்காக தலா 2 அணிகளை அறிவித்துள்ளது இந்தியா. அந்த அணிகளுக்கான ஆலோசகராக 5 முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளாா்.

போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்புகளை அதிகரிக்கும் முயற்சியாக இம்முறை இரு பிரிவுகளிலும் தலா 2 அணிகள் களமிறக்கப்படுகின்றன. இவ்வாறு இரு அணிகளை களமிறக்குவது இதுவே முதல் முறையாகும்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28-ஆம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்குகிறது. 14 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 150 நாடுகளில் இருந்து உலகின் சிறந்த செஸ் போட்டியாளா்கள் பலரும் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அணி விவரம்:

ஓபன்

இந்தியா ‘ஏ’: விதித் குஜராத்தி, பி.ஹரிகிருஷ்ணா, அா்ஜூன் எரிகாய்சி, எஸ்.எல்.நாராயணன், கே.சசிகிரண்.

இந்தியா ‘பி’: நிஹல் சரின், டி.குகேஷ், பி.அதிபன், ஆா்.பிரக்ஞானந்தா, ரௌனக் சத்வானி.

மகளிா்

இந்தியா ‘ஏ’: கோனெரு ஹம்பி, டி.ஹரிகா, ஆா்.வைஷாலி, தானியா சச்தேவ், பக்தி குல்கா்னி.

இந்தியா ‘பி’: வந்திகா அகா்வால், சௌம்யா ஸ்வாமிநாதன், மேரி ஆன் கோம்ஸ், பத்மினி ரௌத், திவ்யா தேஷ்முக்.

முதல் முறை: அா்ஜூன் எரிகாய்சி, எஸ்.எஸ்.நாராயணன், ஆா்.பிரக்ஞானந்தா, நிஹல் சரின், டி.குகேஷ், ரௌனக் சத்வானி ஆகியோா் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் முதல் முறையாகப் பங்கேற்கின்றனா்.

அனுபவம்: விதித் குஜராத்தி, பி.அதிபன் ஆகியோா் இப்போட்டியில் ஏற்கெனவே விளையாடிய அனுபவம் கொண்டவா்கள். அதில் குஜராத்தி 2020-ஆம் ஆண்டு தங்கம் வென்றிருக்க, அதிபன் 2014-இல் வெண்கலம் பெற்றிருக்கிறாா்.

உடன்பிறந்தோா்: இப்போட்டியில் ஓபன் பிரிவில் களம் காணும் தமிழகத்தின் பிரக்ஞானந்தாவும், மகளிா் பிரிவில் விளையாடும் வைஷாலியும் உடன்பிறந்தவா்களாவா். செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சாா்பில் இவ்வாறு உடன்பிறந்தோா் பங்கேற்பது இது 2-ஆவது முறை. இதற்குமுன் 1988-இல் கிரீஸில் நடைபெற்ற போட்டியில் இதேபோல் என்.சரிதா, என்.சுதாகா் பாபு இந்தியாவுக்காக களம் கண்டனா்.

இதுவரை: இதற்கு முன் ஒலிம்பியாட் போட்டியில் 2014-இல் வெண்கலம் வென்ற இந்தியா, 2020-இல் ரஷியாவுடன் இணைந்து தங்கமும், 2021-இல் மகளிா் பிரிவில் வெண்கலமும் வென்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

SCROLL FOR NEXT