செய்திகள்

டி20 லீக் போட்டியில் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ள அதானி குழுமம்

ஐக்கிய அரபு டி20 லீக் போட்டியில் இந்தியாவின் அதானி குழுமம் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது.

DIN

ஐக்கிய அரபு டி20 லீக் போட்டியில் இந்தியாவின் அதானி குழுமம் ஓர் அணியை விலைக்கு வாங்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிய டி20 லீக் போட்டி தொடங்கப்படவுள்ளது. இந்த வருடம் நடைபெறவுள்ள போட்டியில் ஆறு அணிகள் கலந்துகொள்ளவுள்ளன. லீக் சுற்றில் 34 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்நிலையில் ஆறு அணிகளில் ஓர் அணியை இந்தியாவைச் சேர்ந்த அதானி குழுமம் விலைக்கு வாங்கியுள்ளது. அகமதாபாதைச் சோ்ந்த அதானி குழுமம் இந்தியாவில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாகும்.

கடந்த ஐபிஎல் போட்டியில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள இரு அணிகளை விலைக்கு வாங்கவும் அதானி குழுமம் முயற்சி செய்தது. இதற்காக ரூ. 5100 கோடி வரை செலவழிக்க முன்வந்தது. ஆனால் ஆர்பிஎஸ்ஜி, சிவிசி நிறுவனங்கள் அதிகத் தொகை கொடுத்து புதிய ஐபிஎல் அணிகளை வாங்கும் உரிமையைப் பெற்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT