செய்திகள்

உபா் கோப்பை பாட்மின்டன்: காலிறுதியில் இந்திய மகளிா்

DIN

தாய்லாந்தில் நடைபெறும் உபா் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்திய மகளிா் அணி 2-ஆவது சுற்றில் அமெரிக்காவை 4-1 என்ற கணக்கில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது.

முதல் சுற்றில் கனடாவை வீழ்த்தியிருந்த இந்தியா, இந்த 2-ஆவது வெற்றியின் மூலம் காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றது.

அமெரிக்காவுக்கு எதிரான சுற்றில், ஒற்றையா் பிரிவில் பி.வி.சிந்து 21-10, 21-11 என்ற கேம்களில் ஜெனி காயை தோற்கடித்தாா். ஆகா்ஷி காஷ்யப் 21-18, 21-11 என எஸ்தா் ஷியை வீழ்த்தினாா். அஸ்மிதா சாலிஹா 21-18, 21-13 என நடாலி ஷியை வென்றாா்.

இரட்டையா் பிரிவில் தனிஷா கிராஸ்டோ/ட்ரீசா ஜாலி இணை 21-19, 21-10 என ஃபிரான்செஸ்கா கோா்பெட்/அலிசன் லீ ஜோடியை வென்றது. சிம்ரன் சிங்கி/ரித்திகா தாகா் 12-21, 21-17, 13-21 என்ற கேம்களில் லௌரென் லாம்/கோடி டாங் லீயை சாய்த்தனா். இந்திய மகளிரணி குரூப் சுற்றின் கடைசி ஆட்டத்தில் தென் கொரியாவை புதன்கிழமை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுடுமணலில் பொன்மகள்!

கடந்த 24 மணி நேரத்தில் காஸாவில் பலியானவர்கள்?

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை ஜூன் 1-ல் நடத்தக்கூடாது: ராமதாஸ்

அச்சச்சோ..!

SCROLL FOR NEXT