செய்திகள்

நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக்கு டி20 அணியில் வாய்ப்புண்டு

மும்பை: நான் தேர்வுக்குழு தலைவராக  இருந்தால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக்கு டி20 அணியில் வாய்ப்புண்டு என முன்னாள் ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

DIN

மும்பை: நான் தேர்வுக்குழு தலைவராக  இருந்தால் நிச்சயமாக தினேஷ் கார்த்திக்கு டி20 அணியில் வாய்ப்புண்டு என முன்னாள் இந்திய ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 இல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் பினிஷிங் ரோலில் சிறப்பாக ஆடி வருகிறார். 12 மேட்சில் 274 ரன்களுடன் 68.50 சராசரி வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் 200இல் விளையாடுகிறார். அவரது பரபரப்பான கால்களை நகர்த்தி ஆடும் அற்புதமான பேட்டிங்கை பார்க்க அழகாக இருக்கிறது.  

”தினேஷ் கார்த்திக் பெங்களூர் அணிக்காக சிறப்பாக விளையாடுகிறார். லெக் சைடு அடிக்கும் ஷாட்கள் மிகவும் பிடித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் அவர் ஆட்டத்தை புரிந்துக்கொண்டு அதற்கேற்றார் போல் ஆடுகிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ஆட்டத்தை முடித்து கொடுக்கிறார். நானாக இருந்தால் அவரைத்தான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இந்த டி20 உலக கோப்பைக்குத் தேர்வு செய்வேன் " என்று ஹர்பஜன் சிங் கூறினார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை

SCROLL FOR NEXT