செய்திகள்

உலக குத்துச்சண்டை: தங்கம் வென்றார் இந்தியாவின் நிகாத் ஜரீன்

​உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

DIN


உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

இஸ்தான்புல்லில் நடைபெற்ற உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பின் 52 கிலோ எடைப் பிரிவின் இறுதிச் சுற்றில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தாய்லாந்தின் ஜித்போங் ஜுதாமஸ்ஸை எதிர்கொண்டார். இதில் 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் தாய்லாந்து வீராங்கனையை வீழ்த்திய நிகாத் ஜரீன் உலகம் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.

இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப்பில் தங்கம் வெல்லும் 5-வது வீராங்கனை என்ற பெருமையை ஜரீன் பெற்றுள்ளார். கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் முதல் தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2018-இல் மேரி கோம் 48 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்றார். 

இதற்கு முன்பு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைகள்:

  • 6 முறை சாம்பியன் மேரி கோம் - 2002, 2005, 2006, 2008, 2010, 2018
  • சரிதா தேவி - 2006
  • ஜென்னி ஆர்எல் - 2006
  • லேகா கேசி - 2006

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு! கொலையா என போலீஸ் விசாரணை!

தென்காசி ஐ.டி.ஐ.யில் கண்தான விழிப்புணா்வு முகாம்

தென்காசியில் கிறிஸ்தவா்கள் கண்டன ஆா்ப்பாட்டம்

தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

நைனாா்குடிக்காட்டில் சாலைப் பணியை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT