செய்திகள்

ஆசியக் கோப்பை ஹாக்கி: இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம் டிரா

DIN


ஆசியக் கோப்பை ஹாக்கியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆசியக் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி இன்று (திங்கள்கிழமை) பாகிஸ்தானை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 3-வது நிமிடத்திலேயே பாகிஸ்தான் கோல் அடிப்பதற்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த வாய்ப்பை பாகிஸ்தான் தவறவிட்டது.

இதையடுத்து, 9-வது நிமிடத்தில் கார்த்தி செல்வம் இந்தியாவுக்கு முதல் கோலை அடித்தார். இதன்பிறகு, இந்திய அணி தொடர்ந்து அழுத்தம் கொடுத்து நிறைய பெனால்டி வாய்ப்பைப் பெற்றது. ஆனால், அவை கோலாக மாறவில்லை. அதேசமயம், பாகிஸ்தான் அணியையும் கோல் அடிக்கவில்லை.
 
இதனால், ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், 59-வது நிமிடத்தில் பாகிஸ்தான் அணிக்காக அப்துல் ராணா கோல் அடித்தார். இதன்பிறகு, இருஅணிகளிலும் மேற்கொண்டு கோல் அடிக்கவில்லை. இதனால், ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. 

இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஜப்பானை எதிர்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவாலாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருந்தது: தமன்னா பகிர்ந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அனைத்து நிலைகளிலும் நிதி ஒதுக்குவதில் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது: கு. செல்வப்பெருந்தகை

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஹார்திக் பாண்டியாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது: முன்னாள் இந்திய வீரர்

கண்களால் இறுகப்பற்றும் சானியா!

SCROLL FOR NEXT