செய்திகள்

வெளியேறுவது யார்? இன்று "எலிமினேட்டர்': லக்னௌ (vs) பெங்களூர்

DIN

கொல்கத்தா: ஐபிஎல் போட்டியின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னெள சூப்பர் ஜயன்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் புதன்கிழமை மோதுகின்றன. 
இந்த ஆட்டத்தில் தோற்கும் அணி போட்டியிலிருந்து வெளியேறும். வெல்லும் அணி, இறுதி ஆட்டத்தில் இடம் பிடிக்க குவாலிஃபயர் 1-இல் தோற்கும் அணியுடன் மோத வேண்டும். 
லக்னெளவைப் பொருத்தவரை முதல் சீசனிலேயே அட்டகாசமாக பிளே ஆஃப் வரை முன்னேறியுள்ளது. பேட்டிங்கிற்கு கேப்டன் கே.எல்.ராகுல், குவின்டன் டி காக் பலமாக இருக்கின்றனர். இதர பேட்டர்கள் அவ்வளவாக சோபிக்கவில்லை. அணியின் பெளலிங்கும் பெங்களூர் பேட்டிங் வரிசைக்கு சவால் அளிக்கத் தடுமாறும். 
மறுபுறம் பெங்களூர் அணியில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பியிருப்பது அணிக்கு உத்வேகம் அளிக்கும். தினேஷ் கார்த்திக் அட்டகாசமாக ஃபினிஷிங் செய்கிறார். பெளலிங்கில் ஜோஷ் ஹேஸில்வுட், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல் சிறப்பாகச் செயல்படுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT