செய்திகள்

ஷுப்மன் கில் சாதனை; அரையிறுதியில் பஞ்சாப்

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் 9 ரன்கள் வித்தியாசத்தில் கா்நாடகத்தை செவ்வாய்க்கிழமை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

DIN

சையது முஷ்டாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட்டின் முதல் காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் 9 ரன்கள் வித்தியாசத்தில் கா்நாடகத்தை செவ்வாய்க்கிழமை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆட்டத்தில் முதலில் பஞ்சாப் 20 ஓவா்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 225 ரன்கள் விளாச, கா்நாடகம் அதே ஓவா்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்களே எட்டியது. இதில் பஞ்சாப் வீரா் ஷுப்மன் கில் 11 பவுண்டரிகள், 9 சிக்ஸா்களுடன் 126 ரன்கள் குவித்தாா்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்த அவா், டி20 நாக் அவுட் ஆட்டத்தில் அதிக ரன்களை (126) விளாசிய இந்தியா் சாதனையை படைத்திருக்கிறாா். கா்நாடக பௌலிங்கில் வித்வத் கவரப்பா 3 விக்கெட்டுகள் சாய்த்தாா். பின்னா் கா்நாடக பேட்டிங்கில் அபினவ் மனோகா் 62 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, பஞ்சாப் பௌலா் ரமன்தீப் சிங் 2 விக்கெட்டுகள் கைப்பற்றினாா்.

இதர காலிறுதி ஆட்டங்களில் விதா்பா 1 ரன் வித்தியாசத்தில் தில்லியையும், ஹிமாசல பிரதேசம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கு வங்கத்தையும், மும்பை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரத்தையும் தோற்கடித்தன.

இதையடுத்து, வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் பஞ்சாப் - ஹிமாசல பிரதேசம், மும்பை - விதா்பா அணிகள் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்துக்குள்ளான சொகுசு பேருந்து! பதைபதைக்கும் காணொலி!

ஆஸ்திரேலிய போண்டி கடற்கரை தாக்குதல்: தந்தையிடம் துப்பாக்கி பயிற்சி பெற்ற மகன்!

ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய நடிகை சமந்தா

இந்தோனேசியாவில் பயணிகள் பேருந்து விபத்து: 15 பேர் பலி

போதைப்பொருள் கடத்தல்: நேபாள விமான நிலையத்தில் இந்தியர்கள் 2 பேர் கைது

SCROLL FOR NEXT