செய்திகள்

டி20 உலகக்கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

டி20 உலக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது.  

DIN

டி20 உலக்கோப்பையில் தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து வீழ்த்தியதால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

அடிலெய்டில் இன்று நடந்த சூப்பர் 12 சுற்று போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. 159 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியில் வீரர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை.

இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் நெதர்லாந்து அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நெதர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியடைந்ததால் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து தென்னாப்பிரிக்கா அணி வெளியேறியது. இதையடுத்து, குரூப் பி பிரிவில் 6 புள்ளிகள் பெற்றுள்ள இந்திய அணி டி20 உலகக்கோப்பை அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

அதேசமயம் வங்கசேதம், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று நடைபெறும் போட்டியில் வெல்லும் அணியும் அரையிறுதிக்கு முன்னேறும்.  ஐசிசி தொடர்களில் முக்கியமான போட்டியில் தோற்று வெளியேறும் தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடர்கிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரலட்சுமி விரதம் கடைப்பிடிக்கும் முறையும், பலன்களும்!

ஆரம்ப சுகாதார மையங்களில் பாராமெடிக்கல் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவுக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கான ஆஸி. ஏ அணி!

கடற்கரை - வேளச்சேரி வழித்தடத்தில் இனி மெட்ரோ ரயில்கள்!

குவாஹாட்டி சர்வதேச விமான முனையம் நவம்பரில் திறப்பு!

SCROLL FOR NEXT