முகப்பு
செய்திகள்

ஐபிஎல் போட்டியின் வருங்காலத் திட்டங்கள் என்ன?

ஐபிஎல் போட்டியில் 10 அணிகளே இருக்கும். இதை மேலும் அதிகரித்தால் போட்டியை நடத்துவது சிரமம்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:47 AM
பகிர்:

ஐபிஎல் போட்டியை 2023 முதல் 2027 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தொலைக்காட்சி மற்றும் எண்ம (டிஜிட்டல்) ஊடகங்களில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ஏலத்தில் விட்டதன் மூலம் மொத்தமாக ரூ.48,390.5 கோடி வருவாய் ஈட்டவுள்ளது பிசிசிஐ. தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஸ்னி ஸ்டார் நிறுவனமும் டிஜிடல் ஒளிபரப்பில் வையாகாம் நிறுவனமும் துணைக்கண்டத்தில் உள்ள நாடுகளுக்கான உரிமைகளைப் பெற்றுள்ளன. இதனால் ஐபிஎல் போட்டியில் ஆட்டங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளன. 

ஐபிஎல் 2022 போட்டியில் மொத்தமாக 74 ஆட்டங்கள் நடைபெற்றன. ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் வருடம் 59 ஆட்டங்களே நடைபெற்றன. 2023, 2024 ஆகிய இரு ஆண்டுகளில் தலா 74 ஆட்டங்களை நடத்தவும் 2025, 2026 ஆண்டுகளில் தலா 84 ஆட்டங்களையும் 2027-ல் 94 ஆட்டங்களை நடத்தவும் பிசிசிஐ திட்டுமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் வருங்காலத் திட்டங்கள் பற்றி ஐபிஎல் போட்டியின் தலைவர் அருண் துமால், பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ஐபிஎல் போட்டி முன்பை விடவும் பெரிதாக இருக்கும். உலகின் நெ.1 லீக் போட்டியாக முன்னேறும். ஐபிஎல் போட்டியில் 10 அணிகளே இருக்கும். இதை மேலும் அதிகரித்தால் போட்டியை நடத்துவது சிரமம். முதல் இரு பருவங்களுக்கு 74 ஆட்டங்கள் இருக்கும். அதற்குப் பிறகு 84 ஆக உயரும். சூழல் அமைந்தால் ஒளிபரப்பு உரிமத்தின் 5-வது வருடம் 94 ஆகவும் உயர வாய்ப்புண்டு. பிசிசிஐ விதிமுறைகளின்படி நம்மிடம் ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் வெளிநாட்டு லீக் போட்டிகளில் விளையாடக் கூடாது. தேவை ஏற்பட்டால் வெளிநாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்துவது பற்றி யோசிப்போம். மகளிர் ஐபிஎல் உலகத் தரத்தில் அமையும். முதல் மகளிர் ஐபிஎல் போட்டி 5 அணிகளுடன் மார்ச் மாதம் தொடங்கும் என்றார். 

முழு கட்டுரையைப் படிக்க →