ரூசோவ் 
செய்திகள்

சூப்பர் 12 சுற்றில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர்கள்!

இந்திய வீரர்களில் சூர்யகுமாரும் ராகுலும் தலா 8 சிக்ஸர்களை அடித்துள்ளார்கள். 

DIN

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்களை எடுப்பது கடினமாக இருந்தாலும் சிக்ஸர் மழை பொழியாமல் இல்லை. சில வீரர்கள் வழக்கம் போல இங்கும் சிக்ஸர்கள் அடித்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்கள். 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப் 2 பிரிவில் முதல் இடம் பிடித்து அரையிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது இந்திய அணி. அரையிறுதிக்கு இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பாகிஸ்தான் ஆகிய 4 அணிகள் தகுதி பெற்றுள்ளன. புதன் அன்று சிட்னியில் நடைபெறும் முதல் அரையிறுதியில் நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. வியாழன் அன்று அடிலெய்டில் நடைபெறவுள்ள 2-வது அரையிறுதியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

சூப்பர் 12 சுற்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களில் முதலிடம் பிடித்துள்ளார்கள் தென்னாப்பிரிக்காவின் ரூசோவும் ஆஸ்திரேலியாவின் ஸ்டாய்னிஸும். இருவரும் தலா 9 சிக்ஸர்களை அடித்துள்ளார்கள். இந்திய வீரர்களில் சூர்யகுமாரும் ராகுலும் தலா 8 சிக்ஸர்களை அடித்துள்ளார்கள். 

சூப்பர் 12 சுற்றில் அதிக சிக்ஸர்கள்

ரூசோவ் (தென்னாப்பிரிக்கா) - 9
மார்கஸ் ஸ்டாய்னிஸ் (ஆஸ்திரேலியா) - 9
கிளன் பிளிப்ஸ் (நியூசிலாந்து) - 8
கே.எல். ராகுல் (இந்தியா) - 8
சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 8
விராட் கோலி (இந்தியா) - 7 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT