செய்திகள்

இங்கிலாந்து அபார பந்து வீச்சு: பாகிஸ்தானை 137 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது!

டி 20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு 138 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

DIN

டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் ஞாயிற்றுக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. இரு அணிகளிலும் எந்த மாற்றமும் இல்லை. 

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் ரிஸ்வான் 4வது ஓவரில் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் அணி தடுமாறத் தொடங்கியது. அடுத்தடுத்து வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை. இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியில் பாபர் 32 ரன்களும், ஷான் மசூத் 38 ரன்களும், ஷதாப் கான் 20 ரன்களும் எடுத்தார்கள். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். 

இங்கிலாந்து அணி சார்பாக சாம் கர்ரன் 3 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் ஓக்ஸ் தலா 3 விக்கெட்டுகளும் எடுத்தனர். 

20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 137 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT