செய்திகள்

சென்னையில் நடைபெறுகிறதா இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட்?

கடந்த வருடம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரு டெஸ்டுகள் சென்னையில் நடைபெற்றன.

DIN

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் சென்னையில் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2023 பிப்ரவரியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்நிலையில் டெஸ்ட் தொடர் நடைபெறும் மைதானங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

முதல் டெஸ்ட் சென்னை அல்லது நாகபுரி, ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களில் ஏதாவதொன்றிலும் 2-வது டெஸ்ட் தில்லியிலும் 3-வது டெஸ்ட் தர்மசாலாவிலும் 4-வது டெஸ்ட் ஆமதாபாத்திலும் நடைபெற வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இந்த நான்கில் ஒரு டெஸ்ட் பகலிரவு ஆட்டமாகவும் இருக்க வாய்ப்புள்ளது. இந்தியாவில் இதுவரை மூன்று பகலிரவு டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன. 

கடந்த வருடம், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய இரு டெஸ்டுகள் சென்னையில் நடைபெற்றன. அதற்குப் பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானம் சீரமைக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய தோற்றுத்துடன் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டெஸ்டைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளார்கள். 

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றுக்கு முன்பு இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கடைசியாக மோதுகின்றன. இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு இரு அணிகளுக்கும் உள்ளதால் இந்த டெஸ்ட் தொடரின் முடிவு முக்கியமானதாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜக நிர்வாகி மர்மச் சாவு: கொலையா? காவல்துறை விசாரணை!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு அதிகரிப்பு

கைதி மலேசிய ரீமேக்: முதல் பார்வை போஸ்டர்!

ஆக்ஸ்ஃபோர்டில் பெரியார் படத்தை திறக்கவுள்ளேன்! முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்! | MKStalin | DMK | TNCM

SCROLL FOR NEXT