கோப்புப் படம். 
செய்திகள்

கத்தாரில் கோலாகலமாக தொடங்கிய கால்பந்து திருவிழா

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.

DIN

உலகக் கோப்பை கால்பந்து திருவிழா வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக இன்று தொடங்கியது.

உலகின் 32 நாடுகள் கலந்துகொள்ள, அடுத்த 29 நாள்களுக்கு பரபரப்பும், விறுவிறுப்புமாக நடைபெற இருக்கும் இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில், கத்தாா் - ஈகுவடாா் அணிகள் மோதுகின்றன. அல்கோர் நகரில் 60,000 இருக்கைகள் கொண்ட இல பேத் மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.342 கோடியும், 2ஆவது இடம்பெறும் அணிக்கு ரூ.244 கோடியும் பரிசாக கிடைக்கும். இந்த நிலையில் வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கோலாகலமாக இன்று தொடங்கியது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் முதல் அரேபிய நாடு என்ற பெருமையைப் பெற்றுள்ள கத்தாா், இந்தப் போட்டியை நடத்துவதற்காகக் கடந்த சில ஆண்டுகளாகவே தயாராகி வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT