செய்திகள்

மகளிர் ஆசியக் கோப்பையில் ஜெமிமா அபார ஆட்டம்: 150 ரன்கள் எடுத்த இந்திய அணி!

DIN

வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது.

ஷெஃபாலி வர்மா வர்மா 10 ரன்களிலும் மந்தனா 6 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இதன்பிறகு கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் - ஜெமிமா ரோட்ரிகஸ் அபாரமான கூட்டணியை அமைத்தார்கள். இருவரும் 71 பந்துகளில் 92 ரன்கள் எடுத்தார்கள். ஜெமிமா 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். ஹர்மன்ப்ரீத் 33 ரன்களிலும் ஜெமிமா 76 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்தது. இலங்கையின் ஒஷாதி உதேசிகா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆசியக் கோப்பை டி20 போட்டியில் 7 நாடுகள் போட்டியிடுகின்றன. இந்திய அணி அக்டோபர் 3 அன்று மலேசியாவையும் அக்டோபர் 4 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தையும் அக்டோபர் 7 அன்று பாகிஸ்தானையும் அக்டோபர் 8 அன்று வங்கதேசத்தையும் அக்டோபர் 10 அன்று தாய்லாந்தையும் எதிர்கொள்கிறது. அக்டோபர் 13 அன்று அரையிதிச் சுற்றும் அக்டோபர் 15 அன்று இறுதிச்சுற்றும் நடைபெறவுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை விமான நிலையத்தில் தூக்கி எறியப்படும் தங்கம்? மிரண்டுபோன அதிகாரிகள்

மணீஷ் சிசோடியாவுக்கு மே 31 வரை காவல் நீட்டிப்பு!

பிரதமர் மோடிக்கு இருக்கும் காழ்ப்பின் வெளிப்பாடுதான் அவரது இரட்டை வேடம்: முதல்வர்

ஜூன் 28-ல் ஈரான் அதிபர் தேர்தல்!

நவீன வசதிகளுடன் பிராட்வே பேருந்து நிலையம்....மாதிரி புகைப்படம் வெளியீடு....

SCROLL FOR NEXT