செய்திகள்

டி20 உலகக் கோப்பையில் பிரபல நியூசி. வீரர் பங்கேற்பதில் சந்தேகம்!

பிரபல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் காயம் காரணமாக முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

DIN

பிரபல நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டேரில் மிட்செல் காயம் காரணமாக முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நியூசிலாந்து - பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டி நியூசிலாந்தில் இன்று முதல் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்.

இந்நிலையில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது டேரில் மிட்செல் விரலில் பந்து பட்டு அதன் காரணமாக எலும்புமுறிவு ஏற்பட்டது. இதையடுத்து முத்தரப்பு டி20 தொடரிலிருந்து டேரில் மிட்செல் விலகியுள்ளார். மேலும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் எனத் தெரிகிறது. 

2021 டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 3 சதங்களுடன் 538 ரன்கள் எடுத்தார். 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குப் பிறகு விளையாடிய 13 இன்னிங்ஸில் 301 ரன்கள் எடுத்தார். ஸ்டிரைக் ரேட் - 144.71. நியூசிலாந்து அணியின் முக்கிய வீரராக டேரில் மிட்செல் உள்ளதால் அவர் விரைவில் குணமாகி டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்கவேண்டும் என்பது அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது. 

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் அக்டோபர் 22 அன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது நியூசிலாந்து அணி. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிந்தும் ஓவியம்... யாஷிகா ஆனந்த்!

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

SCROLL FOR NEXT