செய்திகள்

மகளிர் ஆசியக் கோப்பை: ஷெஃபாலி, மந்தனா உதவியால் 159 ரன்கள் எடுத்த இந்திய அணி!

DIN

மகளிர் ஆசியக் கோப்பை டி20 போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது இந்திய அணி.

முதல் ஆட்டத்தில் இலங்கையை எளிதாக வீழ்த்திய இந்திய மகளிர் அணி, 2-வது ஆட்டத்தில் மலேசியாவை 30 ரன்கள் வித்தியாசத்தில் (டி/எல் முறையில்) தோற்கடித்தது. 3-வது ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எளிதாக வென்றது. 4-வது ஆட்டத்தில்  13 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானிடம் அதிர்ச்சித் தோல்வியை அடைந்தது. வங்கதேச அணி முதல் மூன்று ஆட்டங்களில் இரு வெற்றிகளும் ஒரு தோல்வியும் பெற்றுள்ளது. 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் மகளிர் அணிகள் மோதுகின்றன. ஹர்மன்ப்ரீத் கெளர் ஓய்வு எடுத்துக்கொண்டதால் மந்தனா கேப்டனாகச் செயல்படுகிறார். அணித் தேர்வில் மூன்று மாற்றங்களுடன் விளையாடும் இந்திய அணி டாஸில் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. 

ஷெஃபாலி வர்மாவும் மந்தனாவும் சிறப்பான தொடக்கத்தை அளித்தார்கள். இருவரும் 96 ரன்கள் சேர்த்தார்கள். 12-வது ஓவரில் 47 ரன்களுடன் ரன் அவுட் ஆனார் மந்தனா. 2 சிக்ஸர்கள் அடித்த ஷெஃபாலி வர்மா, 55 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மேலும் தொடர்ந்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணியால் அதிக ரன்கள் எடுக்க முடியாமல் போனது. கடைசி 10 ஓவர்களில் 68 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஜெமிமா 35 ரன்களை எடுத்துக் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT