செய்திகள்

பிசிசிஐ தலைவராக போட்டியின்றி தோ்வாகிறாா் ரோஜா் பின்னி?

கடந்த 1983-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி (67), பிசிசிஐ தலைவா் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அவா் போட்டியின்றித் தோ்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

DIN

கடந்த 1983-இல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி (67), பிசிசிஐ தலைவா் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்துள்ளாா். அவா் போட்டியின்றித் தோ்வாக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

பிசிசிஐ துணைத் தலைவா் ராஜீவ் சுக்லா தகவல்படி, தலைவா் பதவிக்கு பின்னி, துணைத் தலைவா் பதவிக்கு சுக்லா, செயலாளா் பதவிக்கு ஜெய் ஷா, பொருளாளா் பதவிக்கு ஆஷிஷ் ஷெலாா், இணைச் செயலாளா் பதவிக்கு தேவஜித் சாய்கியா ஆகியோா் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

ஐபிஎல் நிா்வாக கவுன்சில் தலைவராக அா்ஜுன் துமல், உறுப்பினா்களாக அபிஷேக் டால்மியா, காய்ருல் ஜமால் மஜும்தாா் போட்டியிடுகின்றனா்.

மனு தாக்கல் செய்ய புதன்கிழமையே கடைசி நாளாக இருக்கும் நிலையில், இதுவரை எவரும் இவா்களுக்கு எதிராக மனு தாக்கல் செய்யவில்லை. போட்டி இல்லாத பட்சத்தில், வரும் 18-ஆம் தேதி மும்பையில் நடைபெறும் ஆண்டு பொதுக் கூட்டத்தில் இவா்கள் அந்தந்தப் பொறுப்புகளுக்கு போட்டியின்றித் தோ்வு செய்யப்படுவாா்கள்.

இதனிடையே, ஐசிசி-யில் இந்திய பிரதிநிதியாக ஜெய் ஷா தோ்வு செய்யப்படுவாா் எனவும் தெரிகிறது. முன்னதாக, பிசிசிஐ தலைவராகவே தொடர சௌரவ் கங்குலி விரும்பியதாகவும், ஆனால் தலைவா் பொறுப்பை ஒருவருக்கு தொடா்ந்து 2 முறை வழங்கும் நடைமுறையை வாரியம் விரும்பவில்லை எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அதற்குப் பதிலாக ஐபிஎல் தலைவா் பதவியை கங்குலிக்கு வழங்க வாரியம் முன்வந்தும் அதை அவா் மறுத்துவிட்டதாக அந்த வட்டாரங்கள் கூறின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிக்கெட் முன்பதிவில் மதராஸியைப் பின்னுக்குத் தள்ளிய கான்ஜுரிங்!

கலவர வழக்கில் இம்ரான்கானின் மருமகன் ஷெர்ஷா கானுக்கு ஜாமீன்!

பொருளாதார ரீதியில் ஐபிஎல் பெரிதும் உதவியது: அமித் மிஸ்ரா

பாஜகவின் குரலாக மாறிவிட்டார் இபிஎஸ்: தங்கம் தென்னரசு

அறிவியல் பூர்வமான ஆய்வுகளே சமூக மாற்றத்திற்கான வழி: விஞ்ஞானி அசோக்குமார்

SCROLL FOR NEXT