முகப்பு
செய்திகள்

பயிற்சி ஆட்டம்: முதல் 6 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்த ஆஸி. அணி!

ஆஸி. அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

செய்திகள்

பயிற்சி ஆட்டம்: முதல் 6 ஓவர்களில் 64 ரன்கள் எடுத்த ஆஸி. அணி!

ஆஸி. அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:35 AM
பகிர்:

இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸி. அணி பவர்பிளேயின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்துள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்காக பிரிஸ்பேனில் நடைபெறும் முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மோதுகிறது இந்தியா. டாஸ் வென்ற ஆஸி. அணி ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் தமிழக வீரர்களான தினேஷ் கார்த்திக், அஸ்வின் இடம்பெற்றுள்ளார்கள்.

கே.எல். ராகுல் 57, சூர்யகுமார் யாதவ் 50 ரன்கள் அடித்து இந்திய அணி 20 ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் குவிக்க உதவினார்கள். ரோஹித் சர்மா 15, கோலி 19, பாண்டியா 2, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தார்கள். கேன் ரிச்சர்ட்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

ஆஸி. அணி ஆரம்பம் முதல் அதிரடியாக விளையாடியது. பாண்டியா வீசிய 3-வது ஓவரில் ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்தார்கள் ஆஸி. பேட்டர்கள். இதனால் 4.4 ஓவர்களிலேயே 50 ரன்களைத் தொட்டது ஆஸி. அணி. அதிரடியாக விளையாடிய மிட்செல் மார்ஷ், 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 35 ரன்களுக்கு புவனேஸ்வர் குமார் பந்தில் ஆட்டமிழந்தார். 

ஆஸி. அணி 6 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →