முகப்பு
செய்திகள்

அயர்லாந்துக்கு எதிராக 176 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து!

ஸ்காட்லாந்து தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள்...

செய்திகள்

அயர்லாந்துக்கு எதிராக 176 ரன்கள் குவித்த ஸ்காட்லாந்து!

ஸ்காட்லாந்து தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள்...

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:37 AM
பகிர்:

அயர்லாந்துக்கு எதிரான டி20 உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. 

முதல் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியைத் தோற்கடித்த ஸ்காட்லாந்து அணி, அயர்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்த ஆட்டத்திலும் ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாகிவிடும். முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராகத் தோற்ற அயர்லாந்து, இந்த ஆட்டத்தில் வெல்லவேண்டிய நெருக்கடியில் உள்ளது. உலகக் கோப்பை தகுதிச்சுற்றில் இதுவரை விளையாடிய ஆறு ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்த நான்கு அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 

ஸ்காட்லாந்து தொடக்க வீரர் மைக்கேல் ஜோன்ஸ் சிறப்பாக விளையாடி 55 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகளுடன் 86 ரன்கள் எடுத்து தனது அணி பெரிய ஸ்கோரைக் குவிக்க முக்கியக் காரணமாக அமைந்தார். கேப்டன் ரிச்சி பெரிங்டன் 37 ரன்கள் எடுத்தார். ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →