வருண் சக்ரவர்த்தி (கோப்புப் படம்) 
செய்திகள்

சையத் முஷ்டாக் அலி: தமிழக அணி வெற்றி!

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் சண்டிகர் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி. 

DIN

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டியில் சண்டிகர் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி. 

லக்னெளவில் நடைபெற்ற ஆட்டத்தில் தமிழகம் - சண்டிகர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சண்டிகர் அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. தமிழக அணி கேப்டன் பாபா அபரஜித் நன்கு விளையாடி 55 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்தார். தமிழக அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்தது.

தமிழக அணி அற்புதமாகப் பந்துவீசியதால் சண்டிகர் அணி 18.1 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பாக்மெந்தர் லேதர் அதிகபட்சமாக 38 ரன்கள் எடுத்தார். வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும் நடராஜன், சந்தீப் வாரியர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள். 

இதுவரை விளையாடிய 6 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்றுள்ளது தமிழகம். சண்டிகர் அணி 5 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீ போதும்... திவ்ய பாரதி!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 17 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து! - உயர்நீதிமன்றம்

தேசிய விருதுகள் பெற்ற Parking படக்குழுவின் கொண்டாட்டம்!

விஜய் சேதுபதி - மணிகண்டன் இணையத் தொடர் பெயர் அறிவிப்பு!

யார் இந்த மத் டெய்ட்கே? 24 வயது செய்யறிவு ஆய்வாளர்! ரூ.2,000 கோடி சம்பளம்!!

SCROLL FOR NEXT