செய்திகள்

என் குடும்பம்தான் நான் மீண்டு வர காரணம்: மனம் திறக்கும் இந்திய ஆல்ரவுண்டர்

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயங்களினால் இந்திய அணியில் இடம் பெறதாதபோது அவரது குடும்பத்திலிருந்து கிடைத்த ஆதரவு மீண்டும் சிறப்பாக விளையாட உதவியாக இருந்ததாக மனம் திறந்துள்ளார்.

DIN

இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா காயங்களினால் இந்திய அணியில் இடம் பெறதாதபோது அவரது குடும்பத்திலிருந்து கிடைத்த ஆதரவு மீண்டும் சிறப்பாக விளையாட உதவியாக இருந்ததாக மனம் திறந்துள்ளார்.

டி20 உலகக் கோப்பைத் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் முதல் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் பலப்பரிட்சை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மீண்டும் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட தனது குடும்பம் உறுதுணையாக இருந்ததாக கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து ஹார்திக் பாண்டியா கூறியிருப்பதாவது: நேர்மறையான விஷயங்களை எடுத்துக் கொண்டு அணியில் மீண்டும் சிறப்பான பங்களிப்பை கொடுக்க நிறைய உழைக்க வேண்டியிருந்தது. இது என்னுடைய குடும்ப உறுப்பினர்களால் சாத்தியமானது. எனக்கு எனது குடும்பத்தில் அமைதியான சூழல் இருந்ததால் நான் எனது விளையாட்டில் கவனம் செலுத்த முடிந்தது. எனக்குத் தெரியும் நான் நல்ல நாட்கள் மற்றும் மோசமான நாட்களை கடந்து வந்துள்ளேன். ஆனால், என்னுடைய கடின உழைப்பு எனக்கு நம்பிக்கையை கொடுத்தது. அந்த நம்பிக்கை எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் எனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தார்கள். அதனால், என்னைச் சுற்றி நேர்மறையான விஷயங்கள் நிறைந்திருந்தன.” என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஸா மக்களை வெளியேற்ற இஸ்ரேல் தீவிரம்! மிகவும் மோசமான நிலையில் குழந்தைகள்!!

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு: யோகி ஆதித்யநாத்

சிந்தூர்: பயங்கரவாதிகள் இறுதிச் சடங்கில் அதிகாரிகள் பங்கேற்க உத்தரவிட்டது பாக். ராணுவ தளபதி

பாகிஸ்தான் கேப்டனிடம் நடுவர் மன்னிப்பு: என்னதான் நடந்தது?

விபத்தை ஏற்படுத்திவிட்டு அலட்சியம்?: சிறப்பு சார்பு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT