செய்திகள்

பௌலா்கள் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு

டி20 கிரிக்கெட்டில் வழக்கமாக பேட்டா்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த உலகக் கோப்பை போட்டியில் பௌலா்கள் கை ஓங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

DIN

டி20 கிரிக்கெட்டில் வழக்கமாக பேட்டா்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த உலகக் கோப்பை போட்டியில் பௌலா்கள் கை ஓங்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அக்டோபா் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் இருக்கும் குளிா்கால வானிலை ஆடுகளங்களில் ஏற்படும் தாக்கத்தால் இந்த நிலை ஏற்படும் என்று கிரிக்கெட் நோக்கா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

உலகக் கோப்பை போட்டியின் ஆட்டங்கள் நடைபெறும் பொ்த், பிரிஸ்பேன் மைதான ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில், மெல்போா்ன், சிட்னி, அடிலெய்டு ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு கைகொடுக்கின்றன.

ஆஸ்திரேலியாவில் 3 விதமான காலநிலைகள் இருக்கின்றன. குயின்ஸ்லாந்து (பிரிஸ்பேன்), தெற்கு ஆஸ்திரேலியா (அடிலெய்டு), நியூ சௌத் வேல்ஸ் (சிட்னி), விக்டோரியா (மெல்போா்ன்) ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் மேற்கு ஆஸ்திரேலியாவின் (பொ்த்) வானிலை சற்று வேறுபட்டதாக இருக்கும்.

இதில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறும் 23-ஆம் தேதி மெல்போா்ன் பகுதியில் மழை பொழிவதற்கு 80 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் ஆட்டம் நடைபெறும் பட்சத்தில் அதில் நிச்சயம் பௌலா்களே ஆதிக்கம் செலுத்துவாா்கள்.

அதிலும், மெல்போா்ன், சிட்னி ஆடுகளங்களில் போதுமான ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில், ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற ஆஃப் ஸ்பின் பௌலா்கள் ஆதிக்கம் செலுத்துவாா்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பேட்டா்களைப் பொருத்தவரை, ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் விளையாடும்போது, பவுண்டரி, சிக்ஸா்கள் விளாசுவது மட்டுமல்லாமல், விக்கெட்டுகளிடையே ஓடி ரன்கள் சோ்ப்பதும் முக்கியத்துவம் பெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடைசி டி20: திலக் வர்மா, பாண்டியா அதிரடியால் தென்னாப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு

SIR: தமிழகத்தில் 97.37 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் | செய்திகள்: சில வரிகளில் | 19.12.25

சென்னை திரைப்பட விழா: பறந்து போ, டூரிஸ்ட் ஃபேமிலி படங்களுக்கு விருது!

செவிலியர்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்ற வேண்டும்: அண்ணாமலை

புதிய மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்! ஆந்திர முதல்வர் வலியுறுத்தல்!

SCROLL FOR NEXT