செய்திகள்

111 ரன்களுக்கு சுருண்டது ஆஸ்திரேலியா: நியூசிலாந்து இமாலய வெற்றி

DIN

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியாவை 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அசத்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று (அக்டோபர் 22) மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் டெவான் கான்வே  92 ரன்கள் குவித்தார்.

இதனையடுத்து, 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது ஆஸ்திரேலியா. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர் மற்றும் கேப்டன் ஆரோன் ஃபின்ச் களமிறங்கினர். ஆஸ்திரேலியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. டேவிட் வார்னர் 5 ரன்களிலும், ஆரோன் ஃபின்ச் 13 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் களமிறங்கிய மிட்செல் மார்ஸ் 16 ரன்களிலும், மேக்ஸ்வெல் 28 ரன்களிலும் ஆட்டமிந்து வெளியேறினர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். 

பாட் கம்மின்ஸ் தவிர பின்வரிசை ஆட்டக்காரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால், 17.1 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 111 ரன்கள் குவித்து தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன்மூலம், நியூசிலாந்து அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 

நியூசிலாந்து தரப்பில் சிறப்பாக பந்து வீசிய மிட்செல் சாண்ட்னர் மற்றும் டிம் சௌதி தலா 3 விக்கெட்டுகளையும், டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளையும், ஃபெர்கியூசன் மற்றும் ஈஸ் சோதி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சினிமா கனவுகளும் நிஜ போராட்டங்களும்: ‘ஸ்டார்‘ படம் பேசுவது என்ன?

மின்னுகிறதா கவின் நடித்த ஸ்டார்? - திரைவிமர்சனம்

பாகிஸ்தானின் ஒவ்வொரு அங்குலமும் இந்தியாவுக்குச் சொந்தமானது: அமித்ஷா

கூட்ட நெரிசலில் சிக்கிய கவின்!

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் கமுதி பள்ளி மாணவி முதலிடம்!

SCROLL FOR NEXT