முகப்பு
செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

செய்திகள்

டி20 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதலில் பேட்டிங்

உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 12 சுற்றில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கடைசியாக இவ்விரு அணிகளும், கடந்த உலகக் கோப்பை போட்டியில் இதேபோல் தங்களின் முதல் ஆட்டத்தில் சந்தித்துக் கொண்டன. 

அதில் பாகிஸ்தான் வென்றது. அதுவரை ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானிடம் தோற்றதில்லை என்ற பெருமையை அப்போது இழந்தது இந்தியா. எனவே இப்போது மீண்டும் பாகிஸ்தானை வெல்லும் முனைப்பில் இருக்கிறது இந்தியா. இதர ஆட்டங்களைப் போலத்தான் இந்த ஆட்டமும் என பரஸ்பரம் இரு அணிகளின் கேப்டன்கள் கூறினாலும், இந்தியா - பாகிஸ்தான் மோதல் எப்போதுமே பிரதானமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. 

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த ஆட்டத்தைக் காண மைதானத்தில் குவிய இருக்கும் நிலையில், மழையால் ஆட்டம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. 
 
முழு கட்டுரையைப் படிக்க →