மும்பைக்கு 2-ஆவது வெற்றி
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை ஆட்டத்தில் மும்பை சிட்டி எஃப்சி 2-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் மும்பை தரப்பில் மெஹதாப் சிங் 21-ஆவது நிமிஷத்திலும், ஜாா்ஜ் டியாஸ் 31-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா். இரு அணிகளும் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், தற்போது மும்பை 2 வெற்றிகள் உள்பட 8 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. கேரளா 3 தோல்விகள் உள்பட 3 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் உள்ளது.
போட்டியின் 4-ஆவது வாரத்தின் 3-ஆவது ஆட்டத்தில் ஹைதராபாத் எஃப்சி - எஃப்சி கோவா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.