செய்திகள்

டி20 உலகக் கோப்பை: கைவிடப்பட்ட ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து ஆட்டம்

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

DIN


ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளது.

இரு அணிகளும் டி20 உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக மோத இருந்தன. இரு அணிகளும் இதற்கு முன்பு மோதிய ஆட்டங்களில் ஆப்கானிஸ்தான் அதிக முறை வென்றுள்ளது. எனினும் சமீபத்தில் விளையாடிய டி20 தொடரில் 3-2 என அயர்லாந்து வென்றது. 

இந்நிலையில் மெல்போர்னில் நடைபெற இருந்த ஆட்டம் மழை காரணமாகக் கைவிடப்பட்டது. டாஸ் நிகழ்வுக்குக் கூட வாய்ப்பில்லாமல் கைவிடப்பட்டதால் இரு அணி வீரர்களும் ஏமாற்றமடைந்தார்கள். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தானின் கடைசி இரு ஆட்டங்கள் மழை காரணமாகக் கைவிடப்பட்டுள்ளன. 

3 ஆட்டங்களில் விளையாடி 3 புள்ளிகளுடன் குரூப் 1 புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்தில் உள்ளது அயர்லாந்து. 2 புள்ளிகளுடன் ஆப்கானிஸ்தான் அணி கடைசி இடத்தில் உள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பேல்பூரி

11 மாவட்டங்களில் மாலை 6 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

கேரளத்தில் மனைவியின் கள்ளக் காதலனால் கணவன் கொலை !

வண்ணமலர்கள் ஆறு!

கோலிவுட் ஸ்டூடியோ!

SCROLL FOR NEXT