38 ரன்களில் சுருண்டது ஹாங் காங்: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான்!
ஆசியக் கோப்பை போட்டியில் ஹாங் காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
செய்திகள்38 ரன்களில் சுருண்டது ஹாங் காங்: சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான்!
ஆசியக் கோப்பை போட்டியில் ஹாங் காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆசியக் கோப்பை போட்டியில் ஹாங் காங் அணியை 155 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
ஆசியக் கோப்பையில் இன்று (செப்டம்பர் 2) நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் ஹாங் காங் அணிகள் மோதின. இந்தப் ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹாங் காங் அணியின் கேப்டன் நிஷாகத் கான் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 193 ரன்கள் குவித்தது. முகமது ரிஸ்வான் 78 ரன்களுடனும், குஷ்தில் ஷா 35 ரன்களுடனும் இறுதிவரை களத்தில் இருந்தனர். ஃபகர் ஜமான் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்திருந்தார்.
கடினமான இலக்கை விரட்டிய ஹாங் காங் அணி 10.4 ஓவர்களில் 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 4, முகமது நவாஸ் 3, நசீம் ஷா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றது.