ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட்டில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் மிகப்பெரிய வரலாற்று வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான் அணி.
ஆசியக் கோப்பையின் நேற்றைய (செப்.2) போட்டியில் ஹாங்காங்குக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பாகிஸ்தான் 20 ஓவா்களில் 2 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் சோ்த்தது. அடுத்து ஹாங்காங் 10.4 ஓவா்களில் 38 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் 155 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ‘சூப்பா் 4’ சுற்றுக்குத் தகுதிபெற்றது.
பாகிஸ்தான் 2018இல் மே.இ.தீவுகள் அணியிடம் 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே இதுவரை பாகிஸ்தானின் டி20 போட்டியின் மிகப்பெரிய வெற்றியாக இருந்தது. தற்போது, 155 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற இந்த வெற்றியே பாகிஸ்தானின் டி20 கிரிக்கெட் வரலாற்றிலே மிகப் பெரிய வெற்றி.
இந்த வெற்றி டி20 வரலாற்றில் ஐசிசியின் நிரந்தர உறுப்பினர்களிலே பெற்ற மிகப்பெரிய இரண்டாவது வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்குமுன் இலங்கை அணி 2007 ஐசிசி டி20 உலக கோப்பை போட்டியில் கென்யாவிடம் 172 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே முதலிடத்தில் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.