செய்திகள்

அமெரிக்க ஓபனில் தோல்வி: ஓய்வு பெற்றார் செரீனா வில்லியம்ஸ்!

DIN

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3 ஆவது சுற்றில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். 

ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோம்லஜனோவிச்சிடம் 5-7, 7-6, 1-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

முன்னரே அறிவித்தபடி, இந்த போட்டியுடன் 27 ஆண்டு கால டென்னிஸ் பயணத்தில் இருந்து அவர் ஓய்வு பெறுகிறார்.

செரீனா வில்லியம்ஸ் இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். கடைசியாக, 2017-ல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார். 

இன்னும் ஒரு கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தால் மகளிர் டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் வென்றவரான மார்க்ரெட் கோர்ட்டின் சாதனையை சமன் செய்திருப்பார். 

விம்பிள்டனில் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த அவர், வோக் பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், யு.எஸ். ஓபன் போட்டிக்குப் பிறகு டென்னிஸிலிருந்து வெளியேறவுள்ளதாக அறிவித்திருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

SCROLL FOR NEXT