செய்திகள்

சூப்பர் 4: ரஹ்மானுல்லா அதிரடி, இலங்கைக்கு 176 ரன்கள் இலக்கு

DIN

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் இலங்கையை எதிர்த்து விளையாடிய ஆப்கானிஸ்தான் 175 ரன்கள் குவித்துள்ளது.

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றுகள் இன்று தொடங்கின. இன்று முதல் ஆட்டத்தில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சசாய் மற்றும் ரஹ்மானுல்லா களமிறங்கினர். சசாய் 13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனையடுத்து, ரஹ்மானுல்லா மற்றும் இப்ராஹீம் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்தது. இப்ராஹீம் 40 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிறப்பாக விளையாடிய ரஹ்மானுல்லா அரைசதம் அடித்து அசத்தினார். சிறப்பாக விளையாடிய அவர் 45 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் அடங்கும். 

ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் நஜிபுல்லா 17 ரன்கள் குவிக்க ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் எடுத்தது.

176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இலங்கை அணி களமிறங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT