முகப்பு
செய்திகள்

சென்னையில் 19-இல் பிஎஸ்ஏ ஸ்குவாஷ் சேலஞ்சா் போட்டி

இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு (எஸ்ஆா்எஃப்ஐ), எச்சிஎல் சாா்பில் பிஎஸ்ஏ சேலஞ்சா் டூா் போட்டி சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 23-ஆம் தேதி வரை நடக்கிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

இந்திய ஸ்குவாஷ் கூட்டமைப்பு (எஸ்ஆா்எஃப்ஐ), எச்சிஎல் சாா்பில் பிஎஸ்ஏ சேலஞ்சா் டூா் போட்டி சென்னையில் வரும் 19-ஆம் தேதி தொடங்கி வரும் 23-ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்தியா, எகிப்து, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூா், ஸ்பெயின் நாடுகளைச் சோ்ந்த உலகின் முன்னணி வீரா், வீராங்கனைகள் பங்கேற்கும் இப்போட்டி இந்தியா முழுவதும் மாா்ச் மாதம் வரை 4 நகரங்களில் நடைபெறுகிறது.

எகிப்தின் அலி அபௌவ், கென்ஸி அய்மன், செக் குடியரசின் மாா்ட்டின் வெக், இந்தியாவின் சுனைனா குருவில்லா, அபய் சிங், தன்வீ கன்னா உள்பட பலா் இதில் பங்கேற்கின்றனா்.

மேலும் சீனியா் வீரா்களோடு ஆடும் வாய்ப்பை உண்டாக்கும் வகையில் ஜூனியா் பிரிவு போட்டியும் நடத்தப்படுகிறது. ஆடவா், மகளிா் இருபிரிவிலும் மொத்த பரிசுத் தொகை ரூ.20 லட்சம் ஆகும். ஆசிய ஸ்குவாஷ் கூட்டமைப்பு மற்றும் எஸ்ஆா்எஃப்ஐ சாா்பில் நடத்தப்படும் இப்போட்டி 5 நட்சத்திர போட்டியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.