செய்திகள்

சர்வதேச செஸ் போட்டி: மூன்று பிரபல வீரர்களைத் தோற்கடித்த பிரக்ஞானந்தா!

இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

DIN


ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டியில் முதல் நாளில் மூன்று வலுவான வீரர்களைத் தோற்கடித்துள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா.

மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் 2022 பருவத்தின் 5-வது போட்டியாக ஜூலியஸ் பேர்  கோப்பை செஸ் போட்டி நேற்று முதல் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் கார்ல்சன், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்பட 16 வீரர்கள் பங்கேற்கிறார்கள். இணையம் வழியாக செப்டம்பர் 25 வரை இப்போட்டி நடைபெறும். ஒவ்வொரு வீரரும் தலா 15 ஆட்டங்களில் விளையாட வேண்டும். 16 வீரர்களிலிருந்து 8 பேர் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள். 

முதல் நாளன்று இந்தியாவின் பிரக்ஞானந்தா - இவான்சுக், டுடா, ஜெல்ஃபண்ட் என மூன்று பிரபல வீரர்களை வீழ்த்தினார். எனினும் கடைசி ஆட்டத்தில் கிறிஸ்டோபர் யூவிடம் தோற்றார். முதல் சுற்றில் உலக சாம்பியன் கார்ல்சனிடம் தோற்றார் அர்ஜுன் எரிகைசி. 

முதல் நாள் முடிவில் கார்ல்சன் 10 புள்ளிகளுடன் முதல் இடத்திலும் பிரக்ஞானந்தா, இவான்சுக், ஹான்ஸ் நீமன், அர்ஜுன் எரிகைசி ஆகியோர் தலா 9 புள்ளிகளுடன் 2-ம் இடத்திலும் உள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

துக்கத்தில் முடிந்த திருமணக் கொண்டாட்டம்! பேருந்து விபத்தில் சகோதரிகள் மூவர் பலி!

கோவை மாணவி பாலியல் துன்புறுத்தல்: குற்றவாளிகளைப் பிடித்தது எப்படி? காவல் ஆணையர் பேட்டி! | CBE

SCROLL FOR NEXT