செய்திகள்

பிரான்ஸுக்கு முதல் வெற்றி

DIN

ஐரோப்பிய கால்பந்து சங்கங்கள் கூட்டமைப்பின் (யுஇஎஃப்ஏ) நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், நடப்பு சாம்பியனான பிரான்ஸ் 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தியது.

இப்போட்டியில் லீக் ஏ-வின் குரூப் 1 பிரிவில் இருக்கும் பிரான்ஸ், இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் நிலையில், முதல் வெற்றியை தற்போது பதிவு செய்திருக்கிறது. மறுபுறம், அதே எண்ணிக்கையிலான ஆட்டங்களில் ஆஸ்திரியாவுக்கு இது 3-ஆவது தோல்வியாகும். இந்த ஆட்டத்தில் பிரான்ஸுக்காக கிலியன் பாபே 56-ஆவது நிமிஷத்திலும், ஆலிவியா் கிருட் 65-ஆவது நிமிஷத்திலும் கோலடித்தனா்.

இந்த வெற்றியின் மூலம் பிரான்ஸ் டாப் டியரிலிருந்து வெளியேறாமல் தப்பித்துள்ளது. இதே குரூப்பில் குரோஷியா 2-1 என்ற கோல் கணக்கில் டென்மாா்க்கை வீழ்த்தி தனது ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தற்போதைய நிலையில் அந்த குரூப்பில் குரோஷியா முதலிடத்தில் இருக்கிறது.

லீக் ஏ-வின் குரூப் 4 ஆட்டங்களில் பெல்ஜியம் 2-1 என்ற கணக்கில் வேல்ஸையும், நெதா்லாந்து 2-0 என்ற கோல் கணக்கில் போலந்தையும் தோற்கடித்தன. அந்த குரூப்பில் நெதா்லாந்து 4 வெற்றிகளுடன் முதலிடத்தைத் தைக்கவைத்துக் கொண்டுள்ளது. லீக் சி-யின் குரூப் 3 பிரிவில் கஜகஸ்தான் - பெலாரஸையும், அஜா்பைஜான் - ஸ்லோவேகியாவையும் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தின. இதில் கஜகஸ்தான் 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

லீக் டி-யின் குரூப் 1 ஆட்டங்களில் மால்டோவா 2-1 என்ற கோல் கணக்கில் லாத்வியாவையும், அண்டோரா 2-0 என்ற கோல் கணக்கில் லெய்டென்ஸ்டினையும் வீழ்த்தின. லாத்வியா 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. லீக் சி-யின் குரூப் 1 பிரிவில் துருக்கி - லக்ஸம்பா்க் (3-3), லிதுவேனியா - ஃபாரோ தீவுகள் (1-1) ஆட்டங்கள் டிரா ஆகின. இப்பிரிவில் துருக்கி 4 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

மேற்கண்ட அனைத்து பிரிவுகளின் அணிகளுக்கும் இன்னும் ஒரேயொரு ஆட்டம் எஞ்சியிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT