செய்திகள்

திரையரங்கில் ஒளிபரப்பு: ஜுலான் கோஸ்வாமியை கெளரவிக்கும் கிரிக்கெட் சங்கம்

கொல்கத்தாவில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் பெரிய திரையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு...

DIN

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெறுகிறார் பிரபல வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி. நாளை (செப்டம்பர் 24) லார்ட்ஸில் நடைபெறும் 3-வது ஒருநாள் ஆட்டத்துடன் ஓய்வு பெறும் 39 வயது வேகப்பந்து வீச்சாளர் ஜுலான் கோஸ்வாமிக்குக் கெளரவம் அளிக்க முடிவு செய்துள்ளது பெங்கால் கிரிக்கெட் சங்கம்.

2002-ல் 19 வயது வீராங்கனையாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார் ஜுலான் கோஸ்வாமி. கடந்த 20 வருடங்களில் 12 டெஸ்டுகள், 203 ஒருநாள், 68 டி20 ஆட்டங்களில் இடம்பெற்றுள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (253) எடுத்தவர் ஜுலான் தான். ஆறு 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்டுகள் (353) எடுத்த வீராங்கனை என்கிற சாதனையுடன் அவர் விடைபெறுகிறார். கடைசியாக நியூசிலாந்தில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியில் ஜுலான் விளையாடினார். இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் அவர் பங்கேற்கவில்லை. தற்போது இங்கிலாந்து தொடர்களில் பங்கேற்று வருகிறார். மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதல் இரு ஆட்டங்களையும் வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்திய மகளிர் அணி.

இந்நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் கடைசி ஒருநாள் ஆட்டத்தை பெரிய திரையில் காண ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது பெங்கால் கிரிக்கெட் சங்கம். கொல்கத்தாவில் உள்ள ஐநாக்ஸ் திரையரங்கில் பெரிய திரையில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது ஒருநாள் ஆட்டம் திரையிடப்படவுள்ளது. பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் இந்த முயற்சிக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள். 2.30 மணி முதல் நடைபெறும் ஆட்டத்தை பெரிய திரையில் காண ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில் 28 பவுன் நகை, ரூ.50,000 திருட்டு

தற்காலிக நீதிபதிகள் நியமனம்: 9 மாதங்களாக பரிந்துரைகளை அனுப்பாத உயா்நீதிமன்றங்கள்!

பள்ளி மாணவா்களுக்கு குடை

கடையின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு

மன்னாா்குடியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு

SCROLL FOR NEXT