முகப்பு
செய்திகள்

கங்குலி ராஜிநாமா செய்யவில்லை: பிசிசிஐ செயலர் ஜெய் ஷா

பிசிசிஐ தலைவர் பதவியை சௌரவ் கங்குலி ராஜிநாமா செய்யவில்லை என செயலர் ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
கோப்புப்படம்
பகிர்:


பிசிசிஐ தலைவர் பதவியை சௌரவ் கங்குலி ராஜிநாமா செய்யவில்லை என செயலர் ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி, 1992-இல் கிரிக்கெட்டிலிருந்து தொடங்கிய பயணம் 2022-இல் 30 ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், புதிதாக ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

இதையடுத்து, பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து அவர் ராஜிநாமா செய்துவிட்டதாகத் தகவல்கள் கசிந்தன. அரசியலில் நுழையவுள்ளதாகவும் வதந்திகள் பரவின.

இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவியிலிருந்து சௌரவ் கங்குலி விலகுவதாகப் பரவும் வதந்திகள் தவறானது என ஜெய் ஷா விளக்கமளித்துள்ளார்.

பிசிசிஐ தலைவராக கடந்த 2019-இல் தேர்வு செய்யப்பட்டார் கங்குலி. அவரகு பதவிக் காலம் நிறைவடைய இன்னும் 4 மாதங்கள் உள்ளன. இவர் தலைவரான பிறகு இந்தியாவில் முதன்முதலாக பகலிரவு டெஸ்ட் ஆட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →