செய்திகள்

உலகக் கோப்பை ஹாக்கி: குரூப் ‘டி’-யில் இந்தியா

DIN

எஃப்ஐஹெச் ஆடவா் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி குரூப் ‘டி’-யில் சோ்க்கப்பட்டுள்ளது.

ஒடிஸாவில் அடுத்த ஆண்டு ஜனவரியில் 13 முதல் 29 வரை நடைபெற இருக்கும் இந்தப் போட்டிக்கான டிரா வியாழக்கிழமை வெளியானது. இதில், போட்டியை நடத்தும் இந்தியா, குரூப் ‘டி’-யில் இங்கிலாந்து, ஸ்பெயின், வேல்ஸ் அணிகளுடன் இணைந்திருக்கிறது. வேல்ஸுக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டி.

குரூப் ‘ஏ’-வில் உலகின் நம்பா் 1 அணியான ஆஸ்திரேலியா, ஆா்ஜென்டீனா, பிரான்ஸ், தென்னாப்பிரிக்கா அணிகளும், குரூப் ‘பி’-யில் நடப்பு உலக சாம்பியன் பெல்ஜியம், ஜொ்மனி, தென் கொரியா, ஜப்பான் அணிகள் உள்ளன.

குரூப் ‘சி’-யில் நெதா்லாந்து, நியூஸிலாந்து, மலேசியா, சிலி அணிகள் இருக்கின்றன. இதில் சிலி அணிக்கு இது முதல் உலகக் கோப்பை போட்டியாகும். ஒடிஸா மாநிலம் புவனேசுவரம், ரூா்கேலாவில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம் மௌனமடம் ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள் காலமானார்!

தங்கம் விலை அதிரடியாக ரூ. 1,160 குறைந்தது!

2 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலின்போது வெப்ப அலை இருக்குமா?

கண்ணகி அறக்கட்டளை வாகனங்களை தடை செய்த வருவாய் கோட்டாட்சியர்!

பச்சை பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT