செய்திகள்

ஐபிஎல்: ஆட்ட நாயகனாக ஜிம்பாப்வே அணி வீரர்! 

ஐபிஎல் போடியில் விளையாடும் ஜிம்பாப்வே அணி வீரர் முதன்முறையாக ஆட்டநாயகன் விருது பெற்றார். 

DIN

பஞ்சாப் மற்றும் லக்னௌ அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னௌவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

லக்னௌ அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 19.3 ஓவரில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. இதில் பஞ்சாப் அணிக்காக விளையாடும் ஜிம்பாப்வே நாட்டு வீரர்பஞ்சாப் அதிரடியாக விளையாடி அரைசதம் எடுத்தார். 57 ரன்களை எடுத்த சிக்கந்தர் ராஸா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 

பஞ்சாப் அணி வீரர்கள் சொதப்பி வந்த நேரத்தில் பொறுப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு வித்திட்டார் சிக்கந்தர் ராஸா. 

ஜிம்பாப்வே நாட்டின் வீரர் முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்திய ரசிகர்களும் சிக்கந்தர் ராஸாவை கொண்டாடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேள்பாரியைத் தயாரிக்கும் பாலிவுட் நிறுவனம்?

தமிழிசை சௌந்தரராஜனின் சொந்த தொகுதி எது? தவெக நிர்மல்குமார் கேள்வி!

அஜீத் பவார் இல்லை! என்னவாகும் தேசியவாத காங்கிரஸ்?

பாஜக கவுன்சிலர் சௌரப் ஜோஷி சண்டீகரின் புதிய மேயராகத் தேர்வு!

அஜீத் பவார் உடல் தகனம்!

SCROLL FOR NEXT