செய்திகள்

சச்சின் தனது மகனுக்கு கூறிய அறிவுரை என்ன தெரியுமா? 

முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் தனது மகனுக்கு சச்சின் அறிவுரை வழங்கியது இணையத்தில் வைரலானது. 

DIN

நேற்றைய (மார்ச்.16) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி கேகேஆர் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த கேகேஆர் 20 ஓவர்களுக்கு 185 ரன்களை எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 17.4 ஓவர்களில் 186 ரன்களை எடுத்து வென்றது. இந்தப் போட்டியில் சச்சினின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் பங்குபெற்றார். ரோஹித் கையினால் தொப்பியை வாங்கி அணியில் இடம் பெற்றார். 

சச்சின் மகன் என்பதால் இவர் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. முதல் ஓவரை வீசியதே அர்ஜுன் டென்டுல்கர்தான். 2 ஓவர்களுக்கு 17 ரன்களை கொடுத்தார். டீசண்டான ஓவர் என பலரும் பாராட்டினர். 

சச்சின் டெண்டுல்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கிரிக்கெட்டராக நீ தற்போது புதிய அடியை எடுத்து வைத்துள்ளாய். கிரிக்கெட் ரசிகராகவும் உனது தந்தையாகவும் நான் உனக்கு சொல்வது நீ கிரிக்கெட்டை மதிக்க வேண்டும்; அப்படி மதித்தால் அது திரும்பவும் உன்னை மதிக்கும். மிகவும் கஷ்டப்பட்டு இங்கு வந்துள்ளாய். மேலும் தொடர்ந்து செயல்படுவாய் என நினைக்கிறேன். மிகவும் இனிமையான தொடக்கம். வாழ்த்துகள்” என பதிவிட்டு இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT