செய்திகள்

ஆக்ரோஷமாக கத்திய கோலி: அபராதம் விதிப்பு!

DIN

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல் நடத்தை விதிகளை மீறிய காரணத்திற்காக பெங்களூரு அணியின் விராட் கோலிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிக்கு இடையே நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தின் முடிவில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தில் முதலில் சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் சோ்க்க, பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது.

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங்கின் போது பெங்களூரு அணி பந்துவீச்சாளர்கள் போட்ட அனைத்து பந்துகளை சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு பெரிய ஸ்கோர் எடுப்பதற்கு காரணமாக அமைந்தார்.

26 பந்துகளில் 52 ரன்கள் குவித்த துபே, பர்னல் வீசிய 17-வது ஓவரில் கேட்ச் கொடுத்து அவுட்டானர். அப்போது துபேவின் கேட்ச்சை பிடித்த சிராஜுக்கு அருகே பவுண்டரி கோட்டில் நின்றிருந்த கோலி, மிகவும் ஆக்ரோஷமாக கத்தி துபேவின் அவுட்டை கொண்டாடினார்.

இது ஐபிஎல் நடத்தை விதிகள் 2.2-ன் (லெவல் 1) மீறலின்படி கோலி மீது நடவடிக்கை எடுக்க நடுவர்கள் பரிந்துரைத்தனர்.

அதன்படி, விராட் கோலியின் நேற்றைய ஆட்ட ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT