செய்திகள்

ஜாலியாக நடனமாடிய விராட் - அனுஷ்கா ஜோடி!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து நடனமாடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

DIN

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அவரது மனைவியும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் இணைந்து நடனமாடிய காணொலி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி, கடந்த இரண்டு போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். பெங்களூரு அணி விளையாடும் போட்டிகளை காண அனுஷ்கா சர்மா அவ்வப்போது மைதானம் வருவது வழக்கம்.

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக பெங்களூரு அணி விளையாடிய ஆட்டத்தை காண அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு வந்திருந்தார். அப்போது ராஜஸ்தான் அணி வீரர் கொடுத்த கேட்சை பிடித்த கோலி, அனுஷ்கா சர்மாவை நோக்கி ‘ஃப்லையிங் கிஸ்’ கொடுத்த காணொலி வைரலானது.

இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தில் விராட் கோலியுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனமாடும் காணொலியை அனுஷ்கா சர்மா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த காணொலி தற்போது வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT