சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி ராஜஸ்தானில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளுக்கும் இடையேயான கடந்த போட்டி சென்னையில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.