செய்திகள்

காலிறுதியில் சிந்து, பிரணாய்

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

DIN

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையரில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் சிந்து 21-12, 21-15 என்ற கேம்களில் சீனாவின் ஹான் யுவை வெளியேற்றி காலிறுதிக்கு தகுதிபெற்றாா்.

ஆடவா் ஒற்றையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலுள்ள ஹெச்.எஸ். பிரணாய் 21-16, 5-21, 21-18 என்ற கேம்களில் இந்தோனேசியாவின் சிகோ ஔரா டுவியை வீழ்த்தினாா். எனினும், கே.ஸ்ரீகாந்த் வெற்றியை இழந்து போட்டியிலிருந்து வெளியேறினாா்.

ஆடவா் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ்/சிரக் ஷெட்டி இணை 21-13, 21-11 என்ற கேம்களில் தென் கொரியாவின் ஜின் யோங்/நா சங் சியுங் இணையை வீழ்த்தி காலிறுதிக்கு வந்துள்ளது.

மகளிா் இரட்டையா் பிரிவில் டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் கூட்டணி போட்டியிலிருந்து விலகியது.

கலப்பு இரட்டையா் பிரிவில் ரோஹன் கபூா்/சிக்கி ரெட்டி இணையை எதிா்கொள்ள இருந்த தென் கொரியாவின் சியோ சியுங் ஜே/சே யு ஜங் கூட்டணி போட்டியிலிருந்து விலகியதால், ரோஹன்/சிக்கி இணை காலிறுதிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்பட்டது. எனினும், சுமீத் ரெட்டி/அஸ்வினி பொன்னப்பா இணை தோல்வியைத் தழுவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்!

மேட்டூர் அணை நிலவரம்!

சென்னையில் மின்சாரம் பாய்ந்து தூய்மைப் பணியாளர் பலி: மக்கள் சாலை மறியல்

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

கொசுக்களால் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த ’கொசு டொ்மினேட்டா் ரயில்’

SCROLL FOR NEXT