செய்திகள்

ரசிகர்கள் சண்டை: கிரிக்கெட் போட்டியில் கிக்பாக்ஸிங் 

நேற்றைய தில்லி-ஹதராபாத் அணிகள் விளையாடிய ஐபிஎல் போட்டியில் ரசிகர்களிடையே கடும் சண்டை நிகழ்ந்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

DIN

நேற்றைய தில்லி-ஹதராபாத் அணிகள் விளையாடிய ஐபிஎல் போட்டியில் ரசிகர்களிடையே கடும் சண்டை நிகழ்ந்துள்ள விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 197/6 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி அணி 20 ஓவர் முடிவில் 188/6 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்தப் பரபரப்பான ஆட்டத்தின் நடுவே தில்லி மற்றும் ஹைதராபாத் ரசிகர்கள் சண்டையிட்டு கொள்ளும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சண்டைக்கான காரணம் என்னவென தெரியவில்லை. அதேசமயம் காயம் எதும் ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இந்த விடியோவில் ரசிகர்கள் ஒருவரையொருவர் மாறி மாறி 4 பேர் தாக்கிக் கொள்கிறார்கள். கிரிக்கெட் போட்டியா கிக்பாக்ஸிங் போட்டியா எனும் அளவுக்கு சண்டையிட்டு கொண்டனர். 

ஹதராபாத் அணி இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தில்லி அணி 10வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

அஜீத் பவார் விமான விபத்து: மத்திய அமைச்சர் பதில்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மேலும் 10 நாள்கள் அவகாசம்! - உச்சநீதிமன்றம்

SCROLL FOR NEXT