தில்லி அணி வீரர் மிட்செல் மார்ஷ் 
செய்திகள்

ஐபிஎல் 2023: அணி தோல்வியிலும் ஆட்ட நாயகன் விருது வென்றவர்கள்! 

இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் தங்களது அணி தோல்வியுற்றாலும் ஆட்டநாயகன் விருது வென்றவர்கள் பட்டியலில் தில்லி வீரர் இணைந்துள்ளார். 

DIN

தில்லி கேபிடல்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டி தில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 197/6 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தில்லி அணி 20 ஓவர் முடிவில் 188/6 ரன்கள் எடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

தில்லி அணியில் மிட்செல் மார்ஷ் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். பின்னர் பேட்டிங்கில் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். இருப்பினும் தில்லி அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மார்ஷின் சிறப்பான ஆட்டத்திற்காக ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. 

இதுபோல, இந்தாண்டு ஐபிஎல் போட்டியில் தங்களது அணி தோல்வியுற்றாலும் தனிப்பட்ட வித்ததில் சிறப்பாக விளையாடி 3 பேர் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளனர். 

ஷிகர் தவான் - ஹைதராபாத்திற்கு எதிராக. 
வெங்கடேஷ் ஐயர் - மும்பை இந்தியன்ஸ்கு எதிராக. 
மிட்செல் மார்ஷ் - ஹைதராபாத்திற்கு எதிராக. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சீா்காழி: வாகனத்தில் டீசல் திருட்டு

SCROLL FOR NEXT