செய்திகள்

ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி: தென்கொரியா வெற்றி!

7வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி சென்னையில் இன்று (ஆக. 3) முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

DIN


சென்னையில் நடைபெற்று வரும் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையின் முதல் போட்டியில் தென்கொரிய வெற்றி பெற்றது. 

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் ஜப்பானை 2-1 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வீழ்த்தியது.

7வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி சென்னையில் இன்று (ஆக. 3) முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 6 நாடுகள் பங்கேற்றுள்ளன.

16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஹாக்கி போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக ரூ.16 கோடி செலவில் ஹாக்கி விளையாட்டரங்கம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த திடலை முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 28ஆம் தேதி திறந்து வைத்தார். 

இந்த திடலில் நடைபெற்ற முதல் போட்டியில் ஜப்பான் - தென்கொரியா அணிகள் விளையாடின. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய தென்கொரியா, 2-1 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிட்வா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

அரியலூர் உள்பட 5 மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட்!

ராக்கெட் வேகத்தில் சென்ற தக்காளி, முருங்கைக்காய் விலை சற்று குறைந்தது!

பீமாவரத்தின் அழகி... மீனாட்சி சௌதரி!

Dinamani வார ராசிபலன்! | Nov 30 முதல் டிச 6 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

SCROLL FOR NEXT