முகப்பு
செய்திகள்

இந்தியாவின் முதன்மை செஸ் வீரரானார் தமிழக வீரர் குகேஷ்!

இந்தியாவின் முதன்மை (நம்பர் ஒன்) செஸ் வீரர் என்ற இடத்தை தமிழக வீரர் குகேஷ் கைப்பற்றியுள்ளார். 

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 1:04 PM
குகேஷ் (கோப்புப் படம்)
பகிர்:


இந்தியாவின் முதன்மை (நம்பர் ஒன்) செஸ் வீரர் என்ற இடத்தை தமிழக வீரர் குகேஷ் கைப்பற்றியுள்ளார். 

உலக செஸ் போட்டி வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 9வது இவத்துக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவுக்கான பட்டியலில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளார். 

இந்தியாவில் செஸ் வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த விஸ்வநாதன் ஆனந்த் இதன்மூலம் இரண்டாவது இடத்துக்குச் சென்றுள்ளார். 

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற எயிம்செஸ் ரேபிட் போட்டியில் உலக சாம்பியனாக உள்ள கார்ல்சனை வீழ்த்திய இளம் வீரர் என்கிற சாதனையைப் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.