படம் | ட்விட்டர் 
செய்திகள்

ஆர்சிபி அணிக்கு புதிய தலைமைப் பயிற்சியாளர் நியமனம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அனுபவம் வாய்ந்த ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அனுபவம் வாய்ந்த ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் பங்காரின் பதவிக்காலம் வருகிற செப்டம்பரில் முடிவடைய உள்ள நிலையில் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. 

ஆர்சிபி அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆண்டி ஃபிளவர் கூறியதாவது: நான் ஆர்சி அணியுடன் இணைவதை நினைத்து பெருமை கொள்கிறேன். 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல ஆவலோடு காத்திருக்கிறேன். நான் ஆர்சி அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்ற உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது குறிப்பாக மீண்டும் டு பிளெஸியுடன் இணைந்து பணியாற்ற உள்ளது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நாங்கள் கடந்த காலங்களில் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளது சிறப்பானதாக இருக்கப் போகிறது. ஆர்சிபியுடன் இணைந்து மிகப் பெரிய சவாலை சந்திக்க உள்ளேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி ஃபிளவர் ஐபிஎல் போட்டிகளில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஏற்றுமதியாளா்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு

கானாடுகாத்தான் பகுதியில் நவ.7-இல் மின் தடை

ஊழல் குற்றச்சாட்டுகளை திசை திருப்பவே எஸ்ஐஆா் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளது: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

கணினி தரவு பதிவாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT