இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் தான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு ஐபில் போட்டியின்போது குஜராத் மற்றும் சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடிய நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சனுக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் ஐபில் தொடரிலிருந்து விலகினார். அதன் பின் அவருக்கு காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தற்போது அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். இந்த நிலையில், இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை தொடரில் தான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் வங்கதேசத்தை வழிநடத்தும் ஷகிப்!
இது தொடர்பாக அவர் கூறியதாவது: உலகக் கோப்பை போட்டியில் விளையாடுவது என்பது எப்போதும் சிறப்பானது. இந்த உலகக் கோப்பையில் நான் கலந்து கொள்வேனா என்று இன்னும் தெரியவில்லை. கலந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. காயத்திலிருந்து குணமடைந்து உலகக் கோப்பையில் கலந்து கொள்வது கடினமான இலக்கு. இருப்பினும், உலகக் கோப்பையில் கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்துகிறது என்றார்.
நியூசிலாந்து அணிக்காக 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கேன் வில்லியம்சன் 6,555 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.